சக்தி வாய்ந்த சர்வ ஏகாதசி-இன்றைய ராசிபலன்{29.1.2026}

 

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
மேஷம் – வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவோடு நடப்பது பதவி உயர்வுக்கு உதவும்.. வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
ரிஷபம்
taurus-rishibum
ரிஷபம் – உங்கள் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆராய்ச்சி கல்வியில் தேர்ச்சியும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோரின் அன்பு பொங்கும். தொழில் வளம் பெருகும்.
மிதுனம்
gemini-mithunum
மிதுனம் – தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்து பெண்கள் வீட்டுச் செலவுகளை அதிகரிக்கச் செய்வர். செலவுகளைக் குறைத்து பண முடையை தவிர்க்கலாம். வீண் அலைச்சல்கள் தவிர்க்க முடியாததாகும்.
கன்னி
virgo-kanni
கன்னி – அனைத்துச் செயல்களிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். உல்லாசமான புனிதப் பயணங்கள் ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மகரம்
capricorn-magaram
மகரம் -- நற்குணம் மாற, கௌரவ குறைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
கடகம்
cancer-kadagam
கடகம் -- மனமகிழ்ச்சி அதிகரிக்கும் வண்ணம் தனவரவும் அதிகரிக்கும். ஆரோக்கிய மேம்பாட்டால் ஆனந்தம் பெருகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். பிரிவால் ஏற்பட்ட துன்பம், இணைவால் மாறும்.
சிம்மம்
leo-simmam
சிம்மம் – புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அரசு ஆதரவால் உத்தியோக வாய்ப்புகள் பெருகி, வாழ்க்கையில் முன்னேறும் நிலை உருவாகும். தன்னம்பிக்கை, தேகதிடம், தைரியம் ஆகியவை ஓங்கும்.
துலாம்
libra-thulam
துலாம் – தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கை விடாது தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி துணிவுடன் செயல்களில் இறங்கினால். வெற்றி உறுதி.
மீனம்
pisces-meenam
மீனம் – சகோதர ஒற்றுமை ஓங்கும். உழவாரப் பணிகளில் ஈடுபாடு கொள்வார்கள். அனைத்திலும் வெற்றி நிச்சயம். இன்பச் சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
தனுசு -- தொழில் மூலம் தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கென அழகிய தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
விருச்சிகம் – மனைவி மூலம் தனவரவு அதிகரிக்கும். சிலரின் காதல் வெற்றி பெற்று கல்யாணத்தில் முடியும். வியாபாரிகள் தங்கள் சாதுர்யமான பேச்சால் அதிகம் இலாபம் ஈட்டுவது சிறப்பு.
கும்பம்
aquarius-kumbam
கும்பம் – தாய் சொல்லைத் தட்டாதீர்கள். தூக்கமின்மையால் சோர்வு ஏற்பட்டு முக்கிய பணிகளில் சுணக்கம் ஏற்படும். பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது அவசியம்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.