சக்தி வாய்ந்த நவமி-இன்றைய ராசிபலன்{27.1.2026}

 

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
பொருளாதார நிலை போற்றும்படியாய் இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
ரிஷபம்
taurus-rishibum
வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து ஏற்றம் தரும். குடும்ப உறவுகளிடையே மனைவியால் மனக்கசப்பு உருவாகலாம். வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து நடந்தால் இலாபம் அதிகரிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
பெண்களின் நட்பால் புதுசுகம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. தொழில், வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து, எல்லைகள் விரிவடைந்து ஏற்றம் வரும்.
கன்னி
virgo-kanni
எந்தவொரு விஷயத்திலும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்கவேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் எண்ணத்தைக் கைவிடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
மகரம்
capricorn-magaram
வேண்டாத அலைச்சல்களால் ஓய்வு குறையும். அன்பான வார்த்தைகளை அம்மா எதிர்பார்ப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் இல்லாததால், புதிய முயற்சிகளை கை விடுவது நல்லது.
கடகம்
cancer-kadagam
வெற்றி தரும் நாள். அரசு அதிகாரிகள் மூலமாக எதிர்பார்த்த அனைத்து வேலைகளும் அனுகூலமான திசைகளில் நகரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து நல்ல தேர்ச்சி அடைவர்.
சிம்மம்
leo-simmam
வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். திட்டமிட்டபடி எதிர்காலக் குறிக் கோள்கள் எளிதில் நிறைவேறும். குடும்பத்தாரிடையே நல்ல ஒற்றுமையை எதிர்பார்க்கலாம்.
துலாம்
libra-thulam
வாய் வீச்சால் வருமானத்திற்குக் குறைவிருக்காது. வளமான வாழ்வும், வாகன யோகமும் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
மீனம்
pisces-meenam
எதிர்பார்த்த தனலாபங்களில் ஏமாற்றமே மிஞ்சும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சும் எதிர்ப்புக்களைக் குறைக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும். பாதை விட்டு விலகுவர் பகைவர்கள். கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழும்.
கும்பம்
aquarius-kumbam
சந்தோஷமான நிலைகள் மனதில் தெம்பை தரும். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பால் பாசம் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.