உயிரிழந்த சிறுவன் நூரியவத்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நூரிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொடூரமாக தாக்கப்பட்ட 15 வயது சிறுவன்பலி-தந்தை கைது
கேகாலையில் நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (02) இரவு கொடூரமாக தாக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை சந்தேகத்தின் பேரில் நூரிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
