பாழடைந்த கிணற்றில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு.
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனகல பகுதியில், வீட்டிற்கு அருகிலிருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவன் கோனகல கனிஷ்ட வித்தியாலயத்தில் 07 ஆம் வகுப்பு கல்வி பயிலும் மாணவராக இருந்ததுடன், மனநலக் குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பிரேத பரிசோதனை 2026.01.29 அன்று அவிஸ்ஸாவெல்ல மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற உள்ளது.
மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல – மெதகொட பொலிஸ் முறைப்பாட்டு நிலையம் மேற்கொண்டு வருகிறது.


