சக்தி வாய்ந்த பிரதோஷம்-இன்றைய ராசிபலன்{1.1.2026}

 

வியாழக்கிழமை, 1 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
மனைவி, குழந்தைகள் மூலம் சிறிது மனக்கஷ்டங்கள் ஏற்படலாம். அதன் காரணமாக உடல் சோர்வுகள் உண்டாகும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
taurus-rishibum
பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். புத்தாடை அணிகலன்கள் சேரும். விவசாயம் மூலம் லாபங்கள் இருக்கும். வாகன யோகம் உண்டு.
மிதுனம்
gemini-mithunum
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் சுமுகமாக இருந்தால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
கன்னி
virgo-kanni
தெய்வ பக்தியால் தெய்வீக சிந்தனைகள் ஈடுபாடு அதிகரிக்கும். சுகம், சந்தோஷம் ஏற்பட்டு உல்லாசமாகவே பயணிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் குதூகலம் நிலவும். புனித யாத்திரைகள் செல்ல நேரலாம்.
மகரம்
capricorn-magaram
நண்பர்களால் கௌரவ குறைவு ஏற்படலாம். உயிரைக் கொடுத்து உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள்.
கடகம்
cancer-kadagam
ஆரோக்கிய நிலை சீராக இருக்கும். அனைத்து வழிகளிலும் தன வருமானம் பெருகும். மற்றவர்களுக்கு மனதார உதவும், சமூக சேவைக்கான எண்ணங்கள் மனதில் எழும். புகழ் ஓங்கும்.
சிம்மம்
leo-simmam
தொழிலில் அதிக இலாப வரவால் தனலாபம் பெருகும்., நல் ஆரோக்கியமும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.
துலாம்
libra-thulam
வீட்டில் பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. அனுகூலமற்ற காலமாக இருப்பதால் வழக்கு விவகாரங்கள் ஒத்திப் போடுவது சிறப்பு. குடும்பத்தில் சில்லறைச் சண்டைகள் எழலாம்.
மீனம்
pisces-meenam
எல்லா முயற்சிகளும் வெற்றி பெறும். வியாபாரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம், உறவுகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
தன வரவு கூடும். சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் தொடர்பு நலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். இனிய பயணங்கள் எண்ணற்ற வெற்றிகளை அளிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
காதல் உணர்வு தலை தூக்கும். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஆதாயம் அடையலாம். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான நாள்.
கும்பம்
aquarius-kumbam
எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட ஒருவித பய உணர்வு ஏற்படும். உடல் உபாதைகள் காரணமாக, உடலிலும், மனதிலும் ஒரு நிலையற்ற தன்மை நிலவும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற கவனம் தேவை.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.