சொத்துக்காக தந்தையை கொலை செய்த மகன்; சிக்க வைத்த பெண்

 

பலாங்கொட பகுதியில் தந்தையை கொலை செய்து ஆவணங்களை திருடி குற்றச்சாட்டில் உயிரிழந்தவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட, ஹந்தகிரியவை பகுதியை சேர்ந்த 70 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதற்கமைய கொல்லப்பட்டவர் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்து கிடந்ததாகவும், வீட்டிலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சகோதரியின் வீட்டிற்கு வந்த நபர், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டிலிருந்து ஆவணங்களைத் திருடி சென்றுள்ளார். சந்தேக நபர் உயிரிழந்தவரின் மகன் எனவும் பெண் ஒருவர் வெலிகெபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தொடர்ந்து பொலிஸார் 40 வயதான மகனை கைது செய்துள்ளனர்.

சடலம் பலாங்கொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகெபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.