இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்

 


2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் பணவீக்க விபரங்களை புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 2025 ஒக்டோபர் மாதத்தில் 2.7% ஆக பதிவாகியிருந்த நாட்டின் முதன்மை பணவீக்கம், 2025 நவம்பர் மாதத்தில் 2.4% ஆக குறைவடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஒக்டோபர் மாதத்தில் 4.1% ஆக பதிவாகியிருந்த உணவு பணவீக்கம், 2025 நவம்பர் மாதத்தில் 3.6% ஆக குறைவடைந்துள்ளது.

அத்துடன், ஒக்டோபர் மாதத்தில் 1.5% ஆக காணப்பட்ட உணவல்லா பணவீக்கம், 2025 நவம்பர் மாதத்தில் மாற்றமின்றி 1.5% ஆகவே காணப்படுவதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.