இலங்கையில் ஏற்பட்ட பேரிடனை அடுத்து மலையகத்தின் பல பகுதிகளில் வீடுகளில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
கலுந்தேவல பகுதியைச் சேர்ந்த நிலந்த பிரேமகுமார என்பவரின் வீட்டின் தரையில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இரவு 8.30 மணியளவில், தனது பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த போது, வீட்டில் டைல்கள் திடீரென வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். வீட்டின் சுவர்கள் பல இடங்களில் வெடித்து விரிசல் ஏற்பட்டதனை காண முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பகுதி மக்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள பல வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் இருந்த ஒரு கழிப்பறையும் தாழிறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
மலையகத்தின் பல பகுதிகளில் வீடுகளில் வெடிப்பு ஏற்படுவதும், வீதிகளில் வெடிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். மலையகத்தை சீர்குலைத்த டித்வா புயலின் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும் மக்கள் கடும் அச்ச நிலையில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
