உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
உத்தரபிரதேச மாநிலத்தில், 1921 பிப்ரவரி 7ஆம் தேதி, பரேலி நகரில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பிஷன் சந்த் கபூர் என்று பெயர் சூட்டினர்.
குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும் போது, வழக்கமான குழந்தைகள் "அம்மா", "அப்பா" போன்ற சொற்களை முதலில் உச்சரிப்பது வழக்கம். ஆனால் இந்தக் குழந்தை, வெறும் 10 மாதங்களில் "பிலிபிட்" (Pilibhit) என்ற சொல்லை உச்சரித்தது.
இது பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்தது. குழந்தை 3 வயதான போது, இந்த வீடு அழுக்கு, ஏழ்மை நிறைந்தாக இருக்கிறது. ஆனால், என் உண்மையான வீடு ஆடம்பரமானது என்று அடிக்கடி கூறியது.
சாதாரண உடைகளை வீசியெறிந்து, ஆடம்பர உடைகளே விரும்புவதாகக் கூறியது.
சைவ உணவை வெறுத்து, இறைச்சி உணவை ரகசியமாக சாப்பிட்டது. ஐந்து வயதிலேயே, இதுவரை செல்லாத இடங்களுக்கு சென்று மது குடித்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பியது தெரியவந்த போது, "இது என்னோட பழக்கம்" என்று அலட்சியமாகக் கூறியது.
ரயிலில் பயணிக்கும் போது, பிலிபிட் ஸ்டேஷன் அறிவிப்பு கேட்டதும் இறங்க வேண்டுமென்று அடம்பிடித்தது. தந்தையிடம் "உங்களுக்கு ஏன் கள்ளக்காதலி இல்லை..?" என்று கேட்டு அதிர்ச்சி அளித்தது. பின்னர், தன் உண்மையான பெயர் லக்ஷ்மி நாராயணன் என்று கூறியது, பிலிபிட்டைச் சேர்ந்தவன் என்று விவரித்தது.
இந்த விசித்திரமான நடத்தை பரவியதும், வழக்கறிஞர் கே.கே.என். சஹாய் இதை விசாரித்தார். 1926இல் பிஷனைச் சந்தித்து, அவன் கூறியவற்றை எழுதி வைத்துவிட்டு, பிலிபிட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பிஷன் தன் முந்தைய வீட்டைச் சரியாகக் காட்டினான்.
அக்கம்பக்கத்தினரின் பெயர்கள், கடைகள், நிகழ்வுகள் அனைத்தையும் துல்லியமாகக் கூறினான். லக்ஷ்மி நாராயணன், பிலிபிட்டில் பெரிய ஜமீன்தாரின் மகன். செல்வந்தர், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர். பத்மா என்ற விபசாரியுடன் உறவு வைத்திருந்தார்.
அவளிடம் வேறொரு ஆண் வருவதைக் கண்டு கோபத்தில் சுட்டுக் கொன்றார். செல்வாக்கால் தப்பித்தார். பின்னர் உடல்நலக் குறைவால் 1918 டிசம்பர் 15இல் 32 வயதில் இறந்தார். பிஷன், லக்ஷ்மியின் தாயைச் சந்தித்த போது அழுது அணைத்தான்.
உருது மொழியில் பேசி, புகைப்படங்களில் உறவினர்களைச் சரியாக அடையாளம் காட்டினான். மொத்தம் 48 தகவல்களைத் துல்லியமாகக் கூறினான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, புனர்ஜன்ம ஆராய்ச்சியாளர் இயான் ஸ்டீவன்சன் இதை விசாரித்தார்.
இரு குடும்பங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு, ஸ்டீவன்சனின் "Cases of the Reincarnation Type" புத்தகத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது.
இது புனர்ஜன்மத்தை ஆதரிக்கும் வலுவான ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிஷன் வளர்ந்து, முந்தைய வாழ்க்கையின் பாவங்களுக்காக இப்போதைய ஏழ்மை வாழ்க்கை தண்டனை என்று உணர்ந்து அமைதியாக வாழ்ந்தார்.
இந்தக் கதை, இறப்புக்குப் பின் ஆன்மா தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
Summary in English : Bishen Chand Kapoor, born in 1921 in Bareilly, India, claimed from infancy to remember a past life as Laxmi Narain, a wealthy playboy from Pilibhit who died in 1918. As a child, he spoke of Pilibhit, rejected his poor family's lifestyle, craved luxuries, non-vegetarian food, and alcohol, and provided detailed verifiable information about Laxmi Narain's life, family, and hidden treasure. Investigated by lawyer KKN Sahay in the 1920s and later by Ian Stevenson in the 1960s-70s, the case featured pre-verified statements with no prior family connections.