கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியுமாம்? பகீர் கிளப்பிய தீர்க்கதரிசி

 

உலகமெங்கும் உள்ள மக்கள் நாளை கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் நிலையில் நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என தன்னைத்தானே தீர்க்கதரிசி என சொல்லிக் கொள்ளும் கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா (eboh noah)என்பவர் பகீர் தகவலை கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளிலும் அவ்வப்போது ஏற்பட்டும் இயற்கை பேரழிவுகள் சுனாமி, தீ பிடிப்பது, மழை வெள்ளத்தால் மக்கள் மடிவது, மண் சரிவு ஏற்பட்டு மக்கள் இறப்பது என பல இயற்கை பேரழிவுகளால் மக்கள் உயிரிழப்பு ஏற்படும்.அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கலாமே தவிர நடப்பதை தடுக்க முடியாது. அதேசமயம் இன்னமும் இயற்கை பேரழிவுகளை முழுதாக கணிக்கும் அளவுக்கு உலக விஞ்ஞானமும் முன்னேறவில்லை.ஒருபக்கம் உலக பேரழிவுகளை கணிப்பதாக சில தீர்க்கதரிசிகளும் உலக நாடுகளில் இருக்கிறார்கள். பல்கேரிய தீர்க்கதரி பாவா வாங்கா கணிப்புக்கள் உலகளவில் அதிகம் மக்களால் நம்பப்படுகின்றது.இந்த வருடம் சுனாமி வரும், இந்த வருடம் மழை வெள்ளத்தில் மக்கள் இறந்து போவார்கள், இந்த வருடம் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும், இந்த வருடம் ஒரு முக்கிய அரசியல் தலைவர் இறந்து போவார் என்றெல்லாம் அவர்கள் ஜோதிடம் சொல்வார்கள்.அதில் ஆச்சரியப்படும் வகையில் அவற்றில் ஒரு சில விஷயங்கள் நிஜத்தில் நடப்பதும் உண்டு. அப்படி நடக்கும் போது அவர்களை கடவுளாக சிலர் வணங்குகி அவர்களை பின்பற்றுகிறார்கள்.இவ்வாறான நிலையில் தான் கிறிஸ்துமஸ் தினமான நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் கூறியுள்ளார்.அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் அவர் கூறியதால் அவரை பின்தொடர்பவர்கள் தங்களை சொத்துக்களை விற்று அவருக்கு பணங்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.