இந்தியாவில் ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த இளம் பெண்ணொருவருக்கு பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் என்ற இளைஞர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அப் பெண்ணுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துப் பின்னர் பெற்றோரின் பூரண சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளமை உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
குறித்த தம்பதியரின் திருமணப் புகைப்படம் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. கோலு யாதவுக்கும், அவரது பெற்றோருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மனிதநேயத்தின் உயர் மாண்பினைப் பறைசாற்றியதுடன் தூய காதலை வெளிப்படுத்தியதுமான அழகிய தருணம் இது. புதுத் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.....
