டிசம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த மாதத்தில் எரிவாயுவின் விலையை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.
அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,100க்கும் 5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 1,645க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
