இலங்கையில் தென்கிழக்கில் உருவாகும் காற்று சுழற்சி-மீண்டும் சம்பவமா..!

 

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவுகளுக்கு அருகாக நிலை கொண்டுள்ளது. 

இதனால் கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை (22.12.2025) இரவு முதல் படிப்படியாக குறைவடையும் வாய்ப்புள்ளது. 

எதிர்வரும் 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக மீண்டும் எதிர்வரும் 28.12.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்க  தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை எதிர்வரும் 07.01.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஆனால் இடையில் ஒரு சில நாட்கள் மழையற்ற நாட்களாக அமையும். 

அதேவேளை எதிர்வரும் 31.12.2025 முதல் மத்திய, ஊவா, வடமத்திய, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு மழை கிடைக்க தொடங்கும். இப்பிரதேசங்களுக்கும் மழை எதிர்வரும் 07.01.2026 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மீண்டும் எதிர்வரும் 10.01.2026 முதல் 13.01.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

எதிர்வரும் 2026 ஜனவரி மாதத்தின் பெரும்பாலன நாட்கள் மழை நாட்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான வானிலை எதிர்வரும் 26.12.2025 முதல் குறைவடையும் சாத்தியமுள்ளது. 

விவசாயிகள் இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு தமது விவசாய நடவடிக்கைகளைத் திட்டமிடுவது சிறப்பானது. 

இது ஒரு நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு என்பதனால் இதில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை கருத்தில் கொள்ளவும். 


- நாகமுத்து பிரதீபராஜா -

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.