பாகிஸ்தான் நாடாளுமன்றில் அதிரடி சம்பவம்!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்குள் திடீரென புகுந்த ஒரு கழுதை, அங்கிருந்த பாதுகாப்பு வட்டாரங்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் அந்த கழுதை, கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களை மோதியதால் அவர்கள் கீழே விழுந்த சம்பவமும் இடம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு பணியாளர்கள் விரைவாக செயல்பட்டு, எந்தவித பெரிய சேதமும் ஏற்படாமல் அந்த மிருகத்தை வெளியேற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக ஊடகங்களிலும் நகைச்சுவை பதிவுகளின் வெள்ளத்தை உருவாக்கியுள்ளது.
