தமிழர் பகுதியில் பெண் பலி-வெளியான அதிர்ச்சி காரணம்-இப்படியும் மரணமா..!

 

கல்முனைக்குடி வீடொன்றில் இயங்கிய் ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு 

வீடு ஒன்றினுள்  இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து  வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று(6) ஒப்படைக்பப்

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5 பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில்  இச்சம்பவம் வியாழக்கிழமை(4) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில்  அச்சமயம் இருந்த தாய் தந்தை மகள்  ஆகியோர் இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர்.வழமை போன்று தனது பெற்றோர்கள் மறுநாள்  வெள்ளிக்கிழமை(5) காலை எழும்பவில்லை என சந்தேகமடைந்த மகள் உடனடியாக தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதன் போது குறித்த வீட்டில் இருந்த   ஜெனரேட்டரில் இருந்து  கசிந்த வாயுவினால் ஏதோ  இடம்பெற்றுள்ளதை உணர்ந்த நிலையில் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வனர்த்தத்தில் புதிய வீதியில் வசித்து வந்த   54 வயதுடைய குடும்ப பெண்ணான அலியார் பஸ்மிலா என்பவரே மரணமடைந்தவராவார்.

காபன் மொனொக்சைட் காற்றுடன் கலந்து நஞ்சாகியதால் அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின்  மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்து மரண விசாரணை மற்றும் உடற்கூற்று  பரிசோதனையின் பின்னர்   பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவத்தார்.

குறித்த சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு   உயிரிழந்த குடும்ப பெண்ஷின்  மரணம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்  வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வேண்டுகோளிற்கிணங்க சட்ட வைத்திய அதிகாரி கசுன் பெரேரா பங்கேற்புடன்    மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தை மகள் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதுடன்  சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.