சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள இயற்கை உணவுகளில் ஒன்று நாவல் பழங்கள்.
இனிப்புச்சுவை கொண்ட இப்பழம், நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நாவல் பழங்களில் ஜம்போலின் மற்றும் ஜம்போசைன் போன்ற பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன இவை இரத்தத்தில் சர்க்கரை வெளியிடப்படுவதை குறைப்பதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், பாரம்பரிய மருத்துவத்தில் இதன் விதைகளை அரைத்து பொடியாக்கி நீரிழிவுக்கான மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.
நாவல் பழங்களை நேரடியாகவோ அல்லது அதன் விதைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கியோ பயன்படுத்துவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இருப்பினும், இதனை உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

