தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த இந்திய புதுமண ஜோடி நாடு திரும்பியதும் எடுத்த துயர முடிவு

 பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் மிக விமர்சையாகத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் தேனிலவுக்காக இலங்கை வந்து தங்கியிருந்தபோது, பெண்ணின் பழைய காதல் விவகாரம் கணவருக்குத் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே டிசம்பர் 21-ம் திகதி அவர்கள் பெங்களூரு திரும்பினர்.

வீடு திரும்பிய பிறகும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண்ணை இடைவிடாது அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. குடும்ப கௌரவம் கருதி பெண் விவாகரத்து செய்ய விரும்பாமல் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டுள்ளார்.

ஆனால், மன உளைச்சல் தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். . தகவலறிந்து பெண்ணின் உறவினர்கள் கணவர் வீட்டின் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தினர்.

பெண்ணின் மரணம் தொடர்பாகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அந்த இளைஞர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்குத் தப்பிச் சென்றார்.

அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, வெள்ளிக்கிழமை அன்று அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

மகனுடன் தாயாரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பெண்ணின் தாய் இது குறித்துக் கூறுகையில், "அவர்கள் செய்த தவற்றை உணர்ந்துவிட்டார்கள். என் மகள் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள். அவள் இல்லாமல் அவரால் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவரும் இந்த முடிவை எடுத்துள்ளார்" என கண்ணீருடன் தெரிவித்தார்.

ஒரு சிறிய தகராறு மற்றும் குடும்பப் பிரச்சனை இவ்வளவு பெரிய உயிர் இழப்புகளுக்கு இட்டுச் சென்றிருப்பது சமூக ஆர்வலர்களிiடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.