திருமலையில் வீதியோரமாக சிதறி கிடந்த பெண்ணின் சடலம்-வெளியான அதிர்ச்சி காரணம்..!

 

பக்கத்து வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற குடும்பப் பெண் சடலமாக மீட்பு! 

திருகோணமலை சலப்பையாறுப் பகுதியில் வீதியோரத்தில் நேற்று (12.12.2025) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  குச்சவெளி சலப்பையாறுப் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி செல்வராஜா (வயது- 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

பக்கத்து வீட்டுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கணவர் தேடிச்சென்ற போது வீதியோரத்தில் குளிர் காரணமாகக் குடும்பப் பெண் போர்த்திச் சென்ற பெட்சீட் வீதியோரத்தில் இருந்துள்ளது. 

சற்றுத் தூரத்தில் அவர் வீசி எறியப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குறித்த இடத்தில் தடயப் பொருட்களாகக் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டது. 

விபத்துச் சம்பவம் இடம்பெற்றதையடுத்து விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.  

விபத்துத் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் குச்சவெளிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.