ஜனாதிபதி மற்றுமொரு அதிரடி உத்தரவு-அத்து மீறும் இந்தியர்களுக்கு இனி பதிலடிதான் பதில்..!

 

வெள்ளத்தால் பாதிக்கப்படாத ஆனால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத மீனவ குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். 

அனர்த்த பாதிப்பு தொடர்பான  விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்   மன்னார்   மாவட்டச் செயலக மண்டபத்தில்   (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு கடற்பரப்பில் தற்போது அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இந்திய இழுவைப்படகுகளின் எல்லைதாண்டிய அத்துமீறல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தாம்மால் கவனஞ்செலுத்தப்படுமென ஜனாதிபதி இதன்போது பதிலளித்துள்ளார்.

வடபகுதி கடற்பரப்பு முழுவதும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனால் வடபகுதியைச் சேர்ந்த எமது மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகின்றது.

அத்துடன் அண்மையில் ஏற்பட்ட கனமழையால் மீனவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. 

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்படாத மீனவ குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்குமாறு ஜனாதிபதி அநுர வலியுறுத்தியுள்ளார். 

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.