வெல்லவாய தனமன்வில சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. 3 பேருக்கு காயம் (15) வெல்லவாய தனமன்வில வீதியில் நாற்பது கம்பம் பகுதியில் அதிசொகுசு பேருந்து, மோட்டார் சைக்கிள், கார் என்பன மோதியதில் பாரிய விபத்துச் சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது இவ் விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர்களுள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மற்றும், காரின் ஓட்டுநர் மற்றும் பேருந்தின் நடத்துனர் அத்தோடு பேருந்தில் பயணித்த ஒருவருமே காயமடைந்த நிலையில் மோட்டார்சைக்கிள் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.