பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்.. தாலி ஏறிய 8-ஏ மாதம்' காதல் மனைவியை சாகும் வரை அடித்தே கொன்ற கணவன்
இந்தியா தெலுங்கானா மாநிலம் - சாய்பூர் பகுதி: 22வயது அனுஷா 28 வயது பரவேஸ்குமார், இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தபோது, ஒருகட்டத்தில் அனுஷா பெற்றோரிடம் அடைகலம் தேடி சென்றுள்ளார்.
இந்நிலையில் பரவேஸ்குமார் அனுஷாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று சமதானம் பேசி அழைத்து வந்தாராம்...
மீண்டும் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு ஏற்பட, எட்டி அனுஷாவின் வயிற்றில் உதைத்துள்ளார்.
வலி தாங்க முடியாமல் வீட்டு திண்ணையில் அமர்ந்த போது, அங்கிரு உருட்டுகட்டை எடுத்து ஈவுஇரக்கமின்றி அடித்துள்ளார் பரவேஸ்குமார்
மயக்கமடைந்த அனுஷாவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காதலித்து திருமணம் செய்த பெண்ணை கட்டையால் அடித்து கொன்ற CCTV காட்சி பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளன.
