சீரற்ற வானிலையால் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின்னர் இறுதிக் கிரியைக்காக நேற்று கொண்டு செல்லப்பட்டது.
சீரற்ற வானிலையால் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின்னர் இறுதிக் கிரியைக்காக நேற்று கொண்டு செல்லப்பட்டதுநான்கு மாதம் நிரம்பிய குறித்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிந்துள்ளது.
இரணைமடுக் குளத்திலிருந்து வெளியேறும் வெள்ள நீர் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் சடலம் கொண்டு செல்லப்பட்டது.
40 அடியாக காணப்பட்ட இரணைமடுக் குளம் தற்போது 38 அடிக்குக் குறைவாக காணப்படுகின்றது. நீர் வரத்து குறைந்து வருவதால், வான் வழியாக செல்லும் நீரும் குறைந்துள்ளது.
