தித்திக்கும் திங்கள்-இன்றைய ராசிபலன்{29.12.2025}

 

திங்கட்கிழமை, 29 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
இன்று கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். நண்பர்கள் அல்லது உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முயலவும்.
ரிஷபம்
taurus-rishibum
பிறருக்கு உதவி புரிவதில் பேரின்பம் அடைவீர்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்
மிதுனம்
gemini-mithunum
புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும் நாள். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு. விருந்தோம்பலால் மனம் மகிழும்
கன்னி
virgo-kanni
சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பலவழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயரெடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயங்கள் ஏற்படும். ஆபரணங்கள் சேரும். அந்தஸ்தும் உயரும்.
மகரம்
capricorn-magaram
புதிய உற்சாகம் பிறக்கும் பொன்னான நாள். குழந்தைகள்பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகள்உண்டு.
கடகம்
cancer-kadagam
தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். இன்று உங்கள் புகழ் ஓங்கும். கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலமென நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
நியாயமாக நடக்கவேண்டிய நாள். அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் பயன் பெறலாம். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே உரசல்கள் ஏற்படலாம். பொருள்களை கவனமாகப் பாதுகாத்தால் இழப்பைத் தவிரக்கலாம்.
துலாம்
libra-thulam
எல்லா நலன்களும் எய்தும் இனிய நாள். ஆரோக்கியம் மேம்படும். இனிய பயண சுகம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். புதிய ஆண், பெண் நண்பர்கள் அமைவர். அழகிய வீடு அமையும் வாய்ப்பு உருவாகும்.
மீனம்
pisces-meenam
ஆரோக்கியம் மேம்படும் நாள். படுக்கை சுகங்கள், நல்ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். சுகந்த பரிமள வாசனைத் திரவியங்களும் சேரும் மணம் மிக்க நாள்.
தனுசு
sagittarius-thanusu
வீட்டில் திருட்டைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. சிலருக்குப் பணமுடை காரணமாக தூக்கமின்றி அலைவர். காரியத்தடைகள் மற்றும் பணயிழப்புகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
உங்கள் திறமைகள் அனைத்தையும் காட்டி செயல்பட்டாலும் அவமானமே மிஞ்சும். அக்கம் பக்கத்தாருடன் அனுசரணையாக நடப்பது நல்லது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால் தேவையற்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
இன்று சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாதிருந்தால் சுகமான நாள். இன்று ஒரு நாள் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். உடற்சோர்வு ஏற்படலாம். சிலருக்கு அவமானங்கள் ஏற்படலாம்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.