ஞானம் தரும் ஞாயிறு-இன்றைய ராசிபலன்{28-12-2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
குடும்பத்தாரின் அற்ப ஆசைகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படும். பணியாளர்கள் வீண் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பர். என்னதான் உழைத்தாலும் ஆதாயம் பூஜ்யமாகும்.
ரிஷபம்
taurus-rishibum
அரசு வேலைக்கான வாய்ப்பு ஏற்படும். தொழிலில் அதிக முதலீடு செய்து ஆதாயம் பெறுவீர்கள். விளம்பரத்தால் உங்கள் நிறுவனத்தின் புகழ் ஓங்கும். பதவி உயர்வுகள் எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
gemini-mithunum
எல்லாக் காரியங்களும் அனுகூலமாக முடியும். அரசு ஆதரவு, முக்கிய நபர்களின் உதவி, புதிய வேலை வாய்ப்பு, சாஸ்திர, மந்திர வித்தைகளில் தேர்ச்சி ஆகியவை ஏற்படும்.
கன்னி
virgo-kanni
கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். பலவழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காதலில் வெற்றி கிடைக்கும். மனதுக்குப் பிடித்த நவீன புத்தாடைகள் வாங்குவீர்கள்.
மகரம்
capricorn-magaram
ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
கடகம்
cancer-kadagam
தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
சந்திராஷ்டமம். மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். அரசு மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் அலைச்சலுக்குப் பிறகே முடிவுறும்.
துலாம்
libra-thulam
தனவரவு கூடும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். வியாபாரிகளுக்குத் தொழில் அபிவிருத்தி ஏற்படும். பெயரும், புகழும் அதிகரிக்கும்.
மீனம்
pisces-meenam
புதிய சொத்துக்கள் சேரலாம். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவர பரிசுத் திட்டங்களை அறிவிப்பர்.
தனுசு
sagittarius-thanusu
உங்கள் பொருட்கள் அனைத்தையும் திருடு போகாமல் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை. வாகன சுகமும், தூக்கமும் குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். வெற்றிக்கு வழியில்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
குடும்ப உறுப்பினர்களின் தேவை அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் சமூக விழிப்புணர்வோடு இருக்கும். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.