25000 ரூபா கொடுப்பனவு தொடர்பில்-சற்று முன் வெளியான அறிவிப்பு...!

 

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25000 ரூபா கொடுப்பனவானது இதுவரையில் 69.56 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி இந்த மாதத்துக்குள் நிறைவடையும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பேரிடரால் 642,375 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொடுப்பனவு வழங்கப்பட வேண்டிய தகுதியான வீடுகளாக 469,457 வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் 299513 வீடுகளுக்கு இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (21) காலை நிலவரப்படி இன்னும் 169944 வீடுகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக அரசாங்கம் 7.487 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. உடனடி நிவாரணங்களுக்காக அரசாங்கம் இதுவரை 4197 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.

பெருளமளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் கிடைத்து வருகின்றன. அவை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நேரடி ஒருங்கிணைப்புடன் விநியோகிக்கப்படுகின்றன.

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட உணவு,உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், ஒருகொடவத்தை களஞ்சியசாலையிலிருந்து தேவைக்கேற்ப மாவட்ட செயலாளர்கள் ஊடாக அந்தந்த மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலாளர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவிகள் அனைத்தும் முறையான பொறிமுறையின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன என்றார்.ே

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.