புன்னகை தரும் புதன்-இன்றைய ராசிபலன்{24.12.2025}

 

புதன்கிழமை, 24 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
புகழ் ஓங்கும். தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலமென நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் அனுகூலம் பெறலாம். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே உரசல்கள் ஏற்படலாம். பொருள்களை கவனமாகப் பாதுகாத்தால் இழப்பைத் தவிர்க்கலாம்.
கன்னி
virgo-kanni
எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் திறமைக் கேற்ற பாராட்டுக் கிடைக்காது. அக்கம் பக்கத்தாருடன் அனுசரணையாக நடப்பது நல்லது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
மகரம்
capricorn-magaram
குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். படுக்கை சுகங்கள், நல்ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும்.
கடகம்
cancer-kadagam
சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பலவழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயரெடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
திருப்திகரமான பணவரவுகள் மனமகிழ்ச்சி தரும். எதிர்பாராத வரவுகளும் ஏற்றம் தரும். புதிய ஆண், பெண் நண்பர்கள் அமைவர். அழகிய வீடு அமையும் வாய்ப்பு உருவாகும்.
துலாம்
libra-thulam
வீட்டில் திருட்டைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. சிலருக்குப் பணமுடை மற்றும் பணயிழப்புகள் ஏற்படலாம்.
மீனம்
pisces-meenam
பிறருக்கு உதவி புரிவதில் பேரின்பம் அடைவீர்கள். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.
தனுசு
sagittarius-thanusu
சீரான வாழ்க்கைப் பயணத்தில் சில தடைகளும், சிக்கல்களும் ஏற்படலாம். மனைவியுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வருமானக் குறைவு கடன் தொல்லைகளைத் தரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பழைய நிலுவைகள் கைக்கு கிடைப்பதால், புதிய உற்சாகம் பிறக்கும். குழந்தைகள் மீது அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.
கும்பம்
aquarius-kumbam
பெண்களால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகன விபத்தைத் தவிர்க்க வண்டியில் மெதுவாகச் செல்லவும். உறவுகளுடனான கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முயலவும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.