திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
விடுமுறைக் கால உல்லாசமான சுற்றுலாப் பயணங்களால் உள்ளத்தில் சந்தோஷம் பொங்கும். காதல் மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். செல்வம் சேரும்.
ரிஷபம்
taurus-rishibum
முறையற்ற வழிகளில் சென்றால் கஷ்டப்பட நேரும். மனைவியின் வாய்த்துடுக்கால் உறவுகளுக்குள் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் அடைவீர்கள்.
மிதுனம்
gemini-mithunum
குடும்பத்தோடு செல்லும் குறுகிய தூரப் பயணங்கள் மகிழ்ச்சி தரும். சொகுசான புதிய வாகன யோகம் ஏற்படும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் கூடும்.
கன்னி
virgo-kanni
முயற்சிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதிருந்தால் வெற்றி உங்கள் பக்கம்.
மகரம்
capricorn-magaram
பெண்களால் விரயச்செலவுகள் ஏற்படும். நான்கு சுவற்றுக்குள் இருக்க வேண்டிய குடும்ப விவகாரங்களை பொது இடத்தில் பேசாதீர்கள். புதிய பொருட்களை யோசித்து, அவசியப்பட்டால் மட்டும் வாங்குங்கள்.
கடகம்
cancer-kadagam
எல்லா வளமும் பெருகும். தொழில் வளர்ச்சிகாக வரும் வாய்ப்புகளை நழுவவிடாதீர்கள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும்.
சிம்மம்
leo-simmam
பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். பிறர் குறைகூறா வண்ணம் தங்கள் மரியாதையைக் காத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
துலாம்
libra-thulam
வியாபார முன்னேற்றத்திற்கான புது ஆலோசனைகளும் நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். பலவகையிலும் பணவரவு கூடும். புதிய நண்பர்கள், உடன் பிறப்புக்களால் உதவி உண்டு.
மீனம்
pisces-meenam
மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் அரசு அதிகாரிகளுக்குத் தன்னம்பிக்கை கூடும். ஆரோக்கியம் மேம்பட்டு தேகதிடம் அதிகரிக்கும். எதிர்பாரத முன்னேற்றங்களால் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
தொழிலில் தன்னம்பிக்கையும், மனதில் மகிழ்ச்சியும் கூடும். வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை எய்தி, வருமானத்தைக் கூட்ட முயல்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வரவுக்கு மிஞ்சிய, சமாளிக்க முடியாத அளவுக்குச் செலவுகள் ஏற்படும். கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க, பிறர் விவகாரங்களில் மூக்கை நுழைக்காது இருப்பது நல்லது.
கும்பம்
aquarius-kumbam
வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற கொண்டாட்டங்களில் கலந்து மகிழ்வீர்கள். வியாபாரம் அதிகரித்து இலாபத்தை புதிய சேமிப்புக்களில் முதலீடு செய்வீர்கள்.
.jpeg)