சக்தி வாய்ந்த பிரதோஷம்-இன்றைய ராசிபலன்{2.11.2025}

 

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
தொழில் வளம் பெருகி திருப்திகரமான பணவரவு ஏற்படும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள். வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.
ரிஷபம்
taurus-rishibum
பெண்களால் வெட்டிச்செலவுகள் ஏற்பட்டு, அதன் காரணமாக பணமுடை அதிகரிக்கும். திடீர் மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
மிதுனம்
gemini-mithunum
அனைத்து வகையிலும் நன்மைகளும், தனலாபமும், ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாகன யோகம் ஏற்படும். மதிப்பு, மரியாதை கூடும். பிரிந்திருந்தவர் கூடியும் மகிழ்வர்.
கன்னி
virgo-kanni
எதிலும் முறைதவறி நடக்காதீர்கள். தவறு செய்தால் தண்டிக்கப் படுவீர்கள். உயர்வு வரும்போது பணிவு வேண்டும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
வியாபாரத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
கடகம்
cancer-kadagam
நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறருக்குக் கட்டளை இடும்படியான அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனஅமைதி அடைவீர்கள். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
துலாம்
libra-thulam
வாக்காலேயே நல்ல வருமானம் அடைவீர்கள். அன்பு உறவுகளைச் சந்திப்பதனால் அகம் மகிழும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவுவகைகள் ஆகியவையும் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும் ஆனால் நினைத்தபடி வருமானம் இராது. தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பதவி அல்லது இடமாற்றங்கள் ஏற்படலாம்.
தனுசு
sagittarius-thanusu
மனஅமைதி பெற தியானம் செய்க. கௌரவக் குறைவு ஏற்படுத்தும் செயல்களைத் தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்
scorpio-viruchagam
வியாபாரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். எல்லா வளமும் பெருகும். அழகுப் பெண்களின் சிநேகமும், அழகான தனிவீடும் அமையும். சுபகாரியங்கள் நிறைவேறும்.
கும்பம்
aquarius-kumbam
அன்பு மனையாள் செய்யும் பணிவிடை கண்டு அகம் மகிழ்வீர்கள். பல வழிகளிலும் வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். உடன் பிறப்பால் நன்மை உண்டு.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.