எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

மனைவியின் அடங்காத காம வெறி-தடையாக இருந்த கணவனை கொலை செய்த கொடூரம்

பதுளை, மஹியங்கனையில் கணவனை கொலை செய்த பெண் மற்றும் அதற்கு உதவிய ஆண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கபோபுர பகுதியை சேர்ந்த 51 வயது நபர் காணாமல் போனதாக கடந்த 17 ஆம் திகதி மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய ஒக்டோபர் 21 ஆம் திகதி வியன்னா கால்வாயில் அவரது மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 3 நாட்களின் பின்னர் கடந்த 24 ஆம் திகதி, கிரந்துருகோட்டே, உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் அவரது சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது மரணம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகைளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று மஹியங்கனை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நபர், காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவிக்கும் தனக்கும் இடையேயான திருமணத்தை தாண்டிய உறவுக்கு கணவன் தடையாக இருந்ததால், மனைவியின் அறிவுக்கேற்ப இந்தக் கொலையைச் செய்ததாக அவர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதற்கமைய, இந்தக் கொலை தொடர்பாக அந்த நபரும் உயிரிழந்தவரின் மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்ய மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.