யாழ். பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் துஷ்யந்தி மிகுந்தன் அவர்கள் மறைவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் பேராசிரியர் திருமதி துஷ்யந்தி மிகுந்தன் அவர்கள் (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தது மிகுந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர், அதே பீடத்தின் பேராசிரியர் திரு. மிகுந்தன் அவர்களின் வாழ்வுத் துணைவியுமாவார். கல்வித்துறையில் அர்ப்பணிப்புடனும் மாணவர்களுக்கான உழைப்புடனும் பெயர் பெற்ற ஒரு சிறந்த கல்வியாளர் , அவரின் பிரிவால் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்தான் ஏற்பட்டுள்ளது.
ஆழ்ந்த இரங்கல்கள்… 🕯️
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
