பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வெடித்தது எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி உறங்கு எரிமலை - உலகின் எரிமலை வெடிப்பு வரலாற்றில் இதுவே மிகப்பெரியதாக பதிவு!
எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் பின் முதல் முறையாக வெடித்தது,
எரிமலை வெடிப்பால் 14 கிமீ உயரம் வரை சாம்பல் புகை மூட்டங்கள் செங்கடலில் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் நோக்கி பரவியது.
எந்த வித உயிரிழப்பும் பதிவாகவில்லை, ஆனால் சாம்பல் அருகிலுள்ள கிராமங்களை மூடியுள்ளது, இது இப்போது மேய்ச்சல் நிலம் இல்லாத உள்ளூர் கால்நடை மேய்ப்பர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. இப் பிராந்தியத்தினூடான விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது
