யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தில் கொழும்பைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவரும், யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 17 வயது மாணவன் ஒருவரும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், யாழ்ப்பாணம் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை அச்சுவேலியில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் 14 நாட்கள் தடுத்துவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பைச் சேர்ந்த 17 வயது மாணவனிடம் ஆயிரத்து 500 போதை மாத்திரைகளும், யாழ்ப்பாணம் – ஊரெழுவைச் சேர்ந்த மாணவனிடம் 200 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ். பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
.jpeg)