இலங்கையை அதிர வைத்த மற்றுமொரு தாக்குதல்-தாய் பலி-மகன் வைத்தியசாலையில்

 

அயகம பொலிஸ் பிரிவின் கொழம்பேவ பிரதேசத்தில் பெண்ணொருர் மீதும் அவரது 16 வயது மகன் மீதும் அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


நேற்று (20) இரவு இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. 

அசிட் தாக்குதலால் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்று, அயகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இதன்போது கொழம்பேவ, கவரகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான தாய் உயிரிழந்தார். 

அயலவர்கள் குழுவொன்றுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் குற்றம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.