யாழ்.பருத்தித்துறை காட்லிக்கல்லூரிக்கு உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவன் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பரீட்சை எழுத துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் துவிச்சக்கர வண்டியை நிறுத்துவதற்கு நிறுத்தும் இடத்திற்கு சென்ற போது அந்த இடத்தில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
பாம்பு கடிக்கு இலக்காகிய மாணவனை உடனடியாக வடமராட்சி வலயக்கல்வி மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அங்க சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் தற்போது குறித்த மாணவன் காட்லிக் கல்லூரியில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது நோயாளர் காவு வண்டி, வைத்தியர்களின் முழுமையான மருத்துவ கண்காணிப்புடன் மாணவன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.