தாயின் இரண்டாவது கணவரால் 17 வயது சிறுமி கொடூர கொலை ; இலங்கையை உலுக்கிய சம்பவம்

 மெதிரிகிரிய - நவநகரய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (26)  நபர் ஒருவரால், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த குறித்த பெண், மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தாயின் இரண்டாவது கணவரால் 17 வயது சிறுமி கொடூர கொலை ; இலங்கையை உலுக்கிய சம்பவம் | 17 Year Old Girl Brutally Murdered

உயிரிழந்தவர் மெதிரிகிரிய - நவநகரய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தனது பாட்டியுடன் வீட்டில் இருந்தபோது குறித்த பெண்ணின் தாயின் இரண்டாவது கணவர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் பாட்டியும் காயமடைந்து தற்போது மெதிரிகிரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரைக் கைது செய்ய மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.