சீனாவைச் சேர்ந்த லியாங் மற்றும் ஹே என்ற கணவன்-மனைவி, ஒரே மாதிரியான முகத் தோற்றம் கொண்டவர்கள். இதைப் பயன்படுத்தி, அவர்கள் தங்கள் மூலிகை மருந்து கடையை விளம்பரப்படுத்தி இணையத்தில் பிரபலமாகியுள்ளனர்...
இருவரும் ஒரே விதமான விக் அணிந்து, ஒரே மாதிரி முகப் பாவனைகளுடன் வீடியோக்கள் எடுத்து, தங்கள் டவுயின் (சீன டிக்டாக்) பக்கத்தில் பதிவிடுகின்றனர். இந்த வேடிக்கையான வீடியோக்கள் மூலம் அவர்களின் மூலிகை சூப், டீ வியாபாரம் வளர்ந்துள்ளது.
இருவரும் இரட்டையர்கள் போல இருக்கிறார்கள்! DNA டெஸ்ட் செய்யுங்கள், உங்கள் உடன்பிறந்தவர்கள் கூட இருக்கலாம் என்று கேலி செய்கின்றனர். ஒரு வீடியோவில், லியாங் தன் கணவருக்கு மேக்கப் செய்து இரட்டை சகோதரிகள் என்று அழைத்தார். இப்படி, தங்கள் ஒரே மாதிரியான தோற்றத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, இந்த ஜோடி தங்கள் வியாபாரத்தை வெற்றிகரமாக வளர்த்து, இணையத்தில் பிரபலமாகியுள்ளனர்.....
