பிடகந்த தோட்டத்திலுள்ள பழைய தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வாய்க்காலில் சிசுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கந்தேனுவர பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே சிசு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவானது மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசுவின் பெற்றோர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பதோடு மேலதிக விசாரணைகளை கந்தேனுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
