12.10.2025 ஞாயிற்றுக்கிழமையாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறி கழகத்தினால்
மாங்குளம் மற்றும் ஓமந்தை பகுதிகளில் உள்ள சாலைகளில் கால்நடைகளால் இரவில் வாகனங்களுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கும், கால்நடைகளின் உயிரைப் பாதுகாப்பதற்கும் "கால்நடை உயிர்காக்கும் காவலர்" திட்டத்தைத் தொடங்கியது.
இதன் அங்கமாக மாங்குளம் மற்றும் ஓமந்தை சுற்றியுள்ள பண்ணைகளைப் பார்வையிட்டு, உரிமையாளர்களுக்கு இது குறித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்துடன் இலவசமாக கால்நடைகளுக்கு பிரதிபலிப்பைக் காட்டக்கூடிய ஒரு பெல்ட் ஒன்றும் அணிவிக்கப்பட்டது.




