பிள்ளைகள் அதிகநேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பிள்ளைகள் அதிகநேரம் குனிந்து, கைத்தொலைபேசியைப் பார்ப்பதால், அவர்களுக்குக் கழுத்து மற்றும் முதுகெலும்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கழுத்து, தோள்பட்டையில் வலியோ அல்லது முதுகெலும்பு அடுக்கில் மாற்றம் ஏற்பட்டு, பிள்ளைகள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாளடைவிலான பழக்கம், பிள்ளைகளின் தோற்றத்தை மாற்றக் கூடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிள்ளைகள் முன்பைப் போன்று, வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடாததே இதற்கு முக்கியக் காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கைத்தொலைபேசியில் மூழ்கிக் கிடக்கும் பிள்ளைகளுக்கு யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவை அளிப்பது, இதற்குத் தீர்வு என்றாலும், எவ்வாறு அமர்வது என கற்றுக் கொடுப்பது, சரியான தலையணை உபயோகிப்பதும் நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.