இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில், 70 வயதுடைய ராமச்சந்திரா என்ற முதியவர் தனது வீட்டில் அமைதியாக வாழ்ந்து வந்தார். அவரது வாழ்க்கை பெரும்பாலும் அமைதியானதாக இருந்தாலும், அவரது மருமகள் சசிகலாவுடன் அடிக்கடி ஏற்படும் சண்டைகள் இடம்பெற்று வந்துள்ளன.
வீட்டு விவகாரங்கள், சிறு சிறு விஷயங்களில் தொடங்கும் வாக்குவாதங்கள், அவை எப்போதும் பெரிய பிரச்சினைகளாக மாறிவிடும். கடந்த 30 ஆம் திகதி வழக்கம்போல் ஒரு சிறிய வாக்குவாதம் தொடங்கியது.
ராமச்சந்திரா தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சசிகலா ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தாள். "நீங்கள் எப்போதும் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள்" என்று சசிகலா கத்தினாள்.
ராமச்சந்திரா அமைதியாக பதிலளிக்க முயன்றார், ஆனால் சசிகலாவின் கோபம் உச்சத்தை எட்டியது. திடீரென, அவள் ராமச்சந்திராவின் கையைப் பிடித்து, அவரது கட்டை விரலை வாயில் வைத்து கடித்தாள். வலியில் அலறிய ராமச்சந்திரா, ஆனால் சசிகலா நிறுத்தவில்லை அந்த விரலை துப்பிவிட்டு, அவரை அடித்து துன்புறுத்தினாள்.
காயமடைந்த ராமச்சந்திரா, வலியால் துடித்தபடி கீழே விழுந்த கட்டை விரலை கடித்து துப்பிவிட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்றார். அங்கு வைத்தியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் ராமச்சந்திரா உடனடியாக பொலிஸில் புகார் அளித்தார். "எனது மருமகள் என்னை தாக்கினாள், என் விரலை கடித்தாள்," என்று அவர் புகாரில் தெரிவித்தார். பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். கிராமத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.