மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாபூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற சிறிய கிராமம், அதன் வினோதமான பழக்கத்தால் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது...
கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் நாகப்பாம்புகள் குடும்ப உறுப்பினர்களாக வாழ்கின்றன. கிராமவாசிகள் நாகங்களை புனித சின்னங்களாகக் கருதி, தங்கள் வீடுகளில் அவற்றுக்கு சிறப்பு இடம் ஒதுக்கி தங்குமிடமும் உணவுமாக அளிக்கிறார்கள். பாம்புகள் வீடுகள் வயல்கள், பள்ளிகள், கடைகள், கூடவே படுக்கையறைகளிலும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன. இதன் காரணமாகவே இந்த கிராமம் இந்தியாவின் பாம்பு கிராமம் என அழைக்கப்படுகிறது.
இது பற்றி அந்த கிராம மக்கள் கூறும்போது, "நாங்கள் நாகங்களை விருந்தினர்களாகக் கருதுகிறோம். அவை எங்கள் வீடுகளுக்குள் வரும்போது அதுவே ஆசீர்வாதம் என நம்புகிறோம்,"
என்கிறார்கள். அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில், ஷெட்பாலில் இதுவரை ஒருவரையும் பாம்பு கடித்ததில்லை. சிறுவர்கள் கூட நாகங்களுடன் பயமின்றி விளையாடும் காட்சி அங்கு சாதாரணமானதாகும்.
கிராமத்தில் தினமும் நாகங்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக நாக பஞ்சமி திருவிழாவின் போது, கிராம மக்கள் பாம்புகளுக்கு பாலும் இனிப்புகளும் வழங்குகிறார்கள். பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள சித்தேஷ்வர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்குள்ள தெய்வம் அவர்களை குணப்படுத்தும் சக்தி உடையது என நம்பப்படுகிறது. வரலாற்று பதிவுகளின்படி, இதுவரை சுமார் 100 பேருக்கு பாம்புக்கடியிலிருந்து மீட்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது...
