அனைத்து கலாசாரங்களையும் அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்பை கல்வி முறைமையினுள்ளேயே பிள்ளைகளிடம் வளர்ப்பது அவசியம் என பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற நவராத்திரி விழா கொண்டாட்டத்தில் (02.10.2025) பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், "அழகைப் போற்றி, பஜனைப் பாடல்கள் பாடி, அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்பும் இந்நாளில், பகிர்வு மற்றும் ஒற்றுமை போன்ற நல்ல அணுகுமுறைகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்," என பிரதமர் கூறினார்.
அமைச்சின் தமிழ்ப் பாடசாலை விவகாரப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி செயலாளர் நாலக்க கலுவெவ, மேலதிக செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.