இரத்தினபுரி - ரத்தனபிட்டிய, சூரிய மல் மாவத்தையில் கழிவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் குறித்த லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, திவுலபிட்டிய, சூரிய மல் மாவத்தையைச் சேர்ந்த கே. டட்லி ஆனந்த என்ற 51 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பழைய கட்டடங்களை இடிப்பது உட்பட பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்,
மேலும் நுகேகொட கம்சபா சந்தி பகுதியில் ஒரு கட்டடத்தை இடித்ததில் இருந்த கழிவுகளை டிப்பர் லொறியில் ஏற்றி வேலை முற்றத்திற்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை வேலை முற்றத்தில் இருந்து டிப்பர் லொறியை பின்னோக்கி செலுத்தும் போது திடீரென கவிழ்ந்து அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.