‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், ஹங்வெல்ல உட்பட பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் நேற்று (14) கைது செய்யப்பட்டிருந்தார்.
பெரிய அளவிலான ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள "பஸ் லலித்", துப்பாக்கிச் சூடு மற்றும் பலரை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
