இரவு நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி
திருகோணமலை காளிகோவிலை அண்மித்துள்ள பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவர் தனித்து நின்றுள்ளார் அவரை விசாரித்தபோது இல்லம் ஒன்றில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவ்விடத்தால் வந்த பொலிஸார் அவரை விசாரித்தபோது அவர் தம்பலகாமத்தைச் சேர்ந்தவர் எனவும் அவரும் அவருடைய அண்ணனும் சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்ததாகவும் பெற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தற்போது உறவினருடன் இருப்பதாகவும் இரண்டு நாட்களாக தனியாக பஸ் தரிப்பு நிலையத்தில் உறங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த சிறுமியின் உறவினர்களை தெரியும் என கூறிய அருகில் உள்ள கடை உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
