பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று (15) காலை மண் மேடு சரிந்து விழுந்ததில் 35 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பசறை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
