இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் பேருந்தொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பேருந்து 20 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் சம்பவத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
