பருவமழை உக்கிரமானதால் உருக்குலைந்த நேபாளம் - அதிகரிக்கும் உயிர்பலி!
நேபாளத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரும் சேதத்திற்கு உள்ளான கோஷி மாகாணத்தின் இலம் மாவட்டத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேபாளத்தின் கோஷி, மாதேஷ், பாக்மதி, கண்டகி மற்றும் லும்பினி ஆகிய 5 மாகாணங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டு இராணுவமும் மீட்புப் பணியில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.