வவுனியா Rotaract கிளப்பின் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.
வவுனியா Rotaract கிளப்பும், ரொனால்ட் ஸ்ரீகாந்த் இன்ஸ்பிரேஷன் யூத் கிளப்பும் இணைந்து, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி வவுனியா பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததான முகாமை ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்த முகாமில் பலர் இரத்ததானத்தில் ஈடுபட்டு சமூக நலனுக்காக தங்களது பங்களிப்பை வழங்கினர். சமூக சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்படும் கிளப்பின் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிட்ட தக்கது.
நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் கிளப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.