மட்டு ஆரையம்பதி கோயில்குளத்தை சேர்ந்தவர் மண்முனை பாத்திற்கு அருகில் மீன் பிடிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழப்பு...
காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்ப ஆரையம்பதி கோயில்குளத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் நேற்றிரவு மண்முனை பாலத்தை அண்டிய ஆற்றுப்பகுதியில் இறங்கி வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்த சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் நீரிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலையில் இந்த உயிரிழப்பு சம்மந்தமான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்